தமிழக தேர்தல் களம்: 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்  

Estimated read time 1 min read

தமிழகத்தின் ஐந்தாண்டு கால தலையெழுத்தை நிர்ணயிக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் இன்று முதற்கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மாலை 6 மணி வரை தடையின்றி வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், பொதுமக்கள் விரைந்து வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

You May Also Like

More From Author