அதிரடி காட்டும் முதல்வர் விஜய்! தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் எல்லைக்குள் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளை உடனடியாக ஆய்வு செய்து மூட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில், முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு, அவை நிரந்தரமாக மூடப்பட உள்ளன.

You May Also Like

More From Author