உலகத் தொழில் துறை சங்கிலி பாதுகாப்பை பேணிக்காக்கும்: சீனா

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 6ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், தெற்காசிய நாடுகளுடன் இணைந்து, வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்ப ஒத்துழைப்பு முதலியவற்றின் மூலம், உலக தொழில் துறை சங்கிலிப் பாதுகாப்பு, நிதானம் ஆகியவற்றின் தடை இல்லாத நிலைமையைப் பேணிக்காக்க சீனா விரும்புவதாக, சீன வணிகத் துறையின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையில் தெற்காசிய நாடுகளுடனான இரு தரப்பு முதலீடுகளை விரைவுபடுத்தி பாதுகாக்கும் உடன்படிக்கையில் கையொப்பமிட சீனா விரும்புவதாக இவ்வமைச்சகத்தின் துணை அமைச்சர் யாங்தோ தெரிவித்தார்.

மேலும், இத்தகைய நாடுகளுடன் வினியோக மற்றும் உற்பத்தி சங்கிலிக்கான ஒத்துழைப்புகளை ஊக்குவித்து, வர்த்தகம் மற்றும் முதலீட்டின் ஒருமைப்பாட்டு வளர்ச்சியைத் தூண்டி, வெளிநாட்டின் ஒட்டுமொத்த சேவை அமைப்புமுறையைச் சீனா மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author