AG600 விமானம் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பத சோதனையை நிறைவேற்றியது

Estimated read time 1 min read

சீனா தற்சார்பாகத் தயாரித்த AG600 பெரிய நிலநீர் விமானம், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் மேற்கொள்ளப்பட்ட பறத்தல் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்று சீனாவின் விமான பயணியர் சேவை தொழிற்துறை குழுமம் ஜூலை 17ஆம் நாள் தெரிவித்தது.

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் நான்சாங்கில் உள்ள விமான நிலையத்தில் சுமார் 2.5 மணி நேரம் நீடித்த சோதனையை AG600 விமானம் வெற்றிகரமாக நிறைவேற்றியது.சோதனையின் போது, அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சோதனை, AG600இன் சான்றளிப்பு செயல்முறையின் முக்கிய பகுதியாகவும் திகழ்கின்றது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், AG600 விமானம் வட சீனாவின் உள் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்தில் குளிர் காலநிலை விமான சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

மேலும்,இரவு நேர சோதனைப் பயணம்,விமான வேக அளவுத்திருத்தம் மற்றும் நிலையான ஸ்டால் வேகம் போன்ற பலவிதமான விமான சோதனைகளையும், AG600 விமானம் வெற்றிகரமாக நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author