சீனாவை புரிந்து கொள்வது பற்றிய 2024ஆம் ஆண்டு மாநாடு டிசம்பர் 3ஆம் நாள் குவாங்சோ மாநகரில் துவங்கியது. சீன நவீனமயமாக்கல் மற்றும் உலக வளர்ச்சிக்கான புதிய வாயப்பு என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த மாநாட்டிற்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறுகையில்,
சீனாவைப் புரிந்துகொண்டால், சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவது, சீன நவீனமயமாக்கலை முன்னேற்றுவது ஆகியவற்றைப் புரிந்துகொள்வது தேவையானது. சீன நவீனமயமாக்கக் கட்டுமானம், அருமையான வாழ்க்கையின் மீதான 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் புதிய மற்றும் பெரிய அளவில் பங்காற்றும் என்றார்.
பல்வேறு நாடுகளுடன் இணைந்து வளர்ச்சிக்குத் துணை புரியும் சூழ்நிலையை உருவாக்கி, பல்வேறு இன்னல்களையும் அறைகூவல்களையும் ஆக்கப்பூர்வமாகச் சமாளித்து, அமைதியான வளர்ச்சி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பு, கூட்டுச் செழுமை ஆகியவற்றைக் கொண்ட உலக நாடுகளின் நவீனமயமாக்கலை நனவாக்குவதை முன்னேற்றி, மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்கும் புதிய அத்தியாயத்தை எழுத சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.