சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில், சீனாவின் குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் புதிய வளர்ச்சிக் கருத்துகளை முழுமையாகவும் சரியாகவும் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். குவாங் சீ, உயர் தர வளர்ச்சியை முதல் கடமையாகக் கொண்டு, புதிய வளர்ச்சி அமைப்பை உருவாக்க வேண்டும். எல்லை பகுதியிலுள்ள உயர் தர வளர்ச்சியில் மேலதிகமான சாதனைகளைப் பெற வேண்டும் என்றார்.
சீன-ஆசியான் தகவல் துறைமுகம் என்ற நிறுவனத்திலும் லியாங்ஜிங் வட்டத்தின் ஒரு குடியிருப்புப் பகுதியிலும் பயணம் மேற்கொண்டு, சீன-ஆசியான் பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் தகவல்மயமாக்க ஆக்கப்பணி, குடியிருப்பு மேலாண்மை மேம்பாடு, பல்வேறு இன மக்களின் ஒன்றிணைப்பு ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.
கிராமப்புற மறுமலர்ச்சி, வேளாண் வல்லரசு ஆக்கப்பணியின் அடிப்படையாகும். இப்பணியை உறுதியாக முன்னேற்ற வேண்டும். தானிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து, சாகுபடி நிலப்பரப்பை நிலைப்படுத்துவதோடு, அறுவடை அளவை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.