ஏமனில் இஸ்ரேல் கடற்படை முதன்முறையாக தாக்குதல்!

Estimated read time 1 min read

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

காஸா போரில் ஹமாஸூக்கு ஆதரவு தெரிவித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை வீசுவது அதிகரித்துவருகிறது.

இதற்கு ஹூதைதா, ராஸ் ஈஸா, அல்-சலீஃப் துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய இஸ்ரேல், அந்தப் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இணையதளம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை தாக்குதல் நடத்தியது.

You May Also Like

More From Author