மயிலாடுதுறையில் போதிய தண்ணீர் இல்லாமல் 300 ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே கப்பூர் கிராமம் உள்ளது.
இங்கு வீரசோழன் ஆற்றின் பாசனத்தை நம்பி 500 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. மேட்டூர் அணையில் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், இப்பகுதியில் பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்கவில்லை.
இதனால், வயல்கள் பாலம் பாலமாக வெடித்து சம்பா நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளன.
பயிர்களை காப்பாற்ற உடனடியாக வீரசோழன் ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
