இராணுவ தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த ஷிச்சின்பிங்

சீனாவில் ஆகஸ்ட் முதல் நாள் இராணுவ நாளாகும். இந்நாளுக்கு முன்னதாக  சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு ஜுலை 30ஆம் நாள் பிற்பகல் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தின் உயர்தர நாகரியமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றி 27ஆவது குழுப் ஆய்வு மேற்கொண்டது. இதில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் கலந்து கொண்டு கட்சி மத்திய கமிட்டி மற்றும் மத்திய ராணுவ ஆணையத்தின் சார்பில், விடுதலைப் படைவீரர்கள், ஆயுதக் காவற்துறையினர்கள், ஆயத்த நிலை படை வீரர்கள் மற்றும் குடிமக்கள் படையினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 15ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், புதிய யுகத்திற்கான சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசச் சிந்தனையை வழிக்காட்டலாகக் கொண்டு, தேசியப் பாதுகாப்பு மற்றும் ராணுவப் படையின் நவீனமயமாக்கலை தரமிக்கதாக முன்னெடுத்து, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கலைப் பயன்படுத்தி, வலிமையான நாட்டின் கட்டுமானத்தையும், தேசிய மறுமலர்ச்சியையும் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கு, உறுதியான உத்திநோக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author