தைவான் பிரச்சினையில் ஜப்பானின் நிலைப்பாடு, 1972ம் ஆண்டில் வெளியாகிய சீன-ஜப்பான் கூட்டறிக்கையில் இருந்ததை விட மாறவில்லை என்று அந்நாட்டு தலைமை அமைச்சர் தகைச்சி சனே குறிப்பிட்டிருந்தார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியேன் 4ம் நாள் தெரிவித்தார்.
இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம் அண்மையில் உலகின் இணைய பயன்பாட்டாளர்களுக்குக் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. தைவான் விவகாரத்துக்கான நிலைப்பாடு, தாக்குதலற்ற தற்காப்பு கொள்கை, இராணுவ நடவடிக்கைகளின் நோக்கம் முதலிய பிரச்சினைகளில், ஜப்பான் பல முறை சொல்லும் செயலும் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பது மட்டுமல்ல, முன்னுக்குப் பின் முரணாகச் செயல்பட்டு வருகிறது. 2வது உலக போரில் தோல்வியடைந்த நாட்டின் கடமைகளை ஜப்பான் நடைமுறை மூலம் நிறைவேற்றி, சீனா மற்றும் சர்வதேச சமூகத்துக்கான வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டும் என்று 91.4 விழுக்காட்டினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
