17வது நீரிணை கருத்தரங்கு தொடங்கவுள்ளது

17வது நீரிணை கருத்தரங்கு தொடர்பான செய்தியாளர் கூட்டம் ஜுன் 14ம் நாள் சீனாவின் ஃபூஜியேன் மாநிலத்தின் ஷியா மன் நகரில் நடைபெற்றது.

இரு கரைகளுக்குமிடையில் மிக பெருமளவிலான அரசு சாரா பரிமாற்றக் கூட்டமாக, 17வது நீரிணை கருத்தரங்கு ஜுன் 15ம் நாள் ஷியா மன் நகரில் துவங்கவுள்ளது.

அரசு சாரா பரிமாற்றத்தை விரிவாக்கி, ஒன்றிணைந்த வளர்ச்சியை ஆழமாக்குவது என்ற தலைப்பில், தலைமை கூட்டம் நடைபெறுவதை தவிர, அடிப்படை பரிமாற்றம், இளைஞர்கள் பரிமாற்றம், பொருளாதாரப் பரிமாற்றம் ஆகிய துறைகளில் 56 நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

ஜுன் 15ம் நாள் காலை 10 மணிக்கு ஷியா மன் கூட்ட மையத்தில் இதன் தலைமை கூட்டம் நடைபெறவுள்ளது.

You May Also Like

More From Author