எத்தியோபியாவின் முன்னாள் அரசு தலைவர் முலது தெஷோம் சீனாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பயின்று, பீக்கிங் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெற்றார்.
எத்தியோபியாவின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதலாவதாக சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அண்மையில், சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், சீன-எத்தியோபிய உறவு, அனைத்து நிலைமையிலும் நெடுநோக்கு கூட்டாளி உறவாகும். 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, சீன முதலீட்டாளர்கள் மீது எத்தியோபியா கவனம் செலுத்தியுள்ளது.
இரு நாட்டு வர்த்தகத் தொகை அதிகரித்து வருகிறது. எத்தியோபியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு மிகவும் முக்கியமானது. தற்போது, எத்தியோபியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா திகழ்கிறது என்றார்.
மேலும், அடுத்த ஆண்டு, எத்தியோபியா பிரிக்ஸ் நாடுகளில் அதிகாரப்பூர்வமாகச் சேர உள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், சீனா, இந்தியா, ரஷியா, பிரேசில் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுடனான ஒத்துழைப்புகளிலிருந்து எத்தியோபியா நலன் பெறுவதோடு, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்புமுறைக்குள் பல்வேறு நாடுகளின் தொடர்புகளை வலுப்படுத்தும். அத்துடன், ஆப்பிரிக்கா மற்றும் உலகத்தில் எத்தியோபியாவின் தகுநிலையை இது உயர்த்தும் என்றும் தெரிவித்தார்.