இரு கூட்டத்தொடர்கள் மூலம் சீனாவை புரிந்து கொள்வது

சீனாவின் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் கூட்டத்தொடர்கள் மூலம் ஜனநாயகம் என்ன என்பதை உலகம் மீண்டும் சிந்திக்கிறது என்று டாங் தெய் எனும் அர்ஜென்டீனாவின் ஓர் இதழின் தலைமை பதிப்பாசிரியர் வூ ட்சி வெய் கூறினார்.

அவர் கூறியதை போல ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற இரு கூட்டத்தொடர்கள், சீனாவின் மக்கள் ஜனநாயகத்தை வெளிபுறம் பார்த்து புரிந்து கொள்வதற்கான முக்கிய ஜன்னலாகும்.
இவ்வாண்டு சீனத் தேசிய மக்கள் பேரவை நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவாகும். சீனத் தேசிய மக்கள் பேரவையின் சுமார் 3 ஆயிரம் பிரதிநிதிகளும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் சுமார் 2100 உறுப்பினர்களும் பெய்ஜிங்கில் ஒன்று கூடி, சீன மக்களின் விருப்பத்தை அரசு விவகாரங்களை விவாதித்து அதில் பங்கு கொள்ளும் சீனாவின் மிக முக்கிய மேடைக்கு கொண்டு வந்து, நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். சீனப் பாணியுடைய ஜனநாயகத்தின் உயிராற்றலை வெளியுலகத்துக்கு இது மீண்டும் காட்டுகிறது.


இவ்வாண்டின் இரு கூட்டத்தொடர்களில், வேலை வாய்ப்பு வழங்கும் புதிய வடிவம், உழைப்பாளர்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாப்பு, முதியோருக்கான காப்புறுதி, குடிமக்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி, கரி குறைந்த பசுமையான வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்பத்தின் சுய வலிமை ஆகியவை தொடர்பாக பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களின் கருத்துருவுகளில், தற்காலத்தின் சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி தொடர்பான அம்சங்கள் இடம்பெறுகின்றன.
புள்ளி விவரங்களின்படி, கடந்த ஆண்டு சீன அரசவையின் பல்வேறு வாரியங்கள், இரு கூட்டத்தொடர்களின் போது முன்வைக்கப்பட்ட 12 ஆயிரத்துக்கும் மேலான ஆலோசனைகளையும், கருத்துருவுகளையும் கையாண்டுள்ளன.

2 ஆயிரத்துக்கு மேலான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் வெளியிடப்பட்டன. சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டை இது பெரிதும் முன்னேற்றியுள்ளது.
தற்போதைய சீனாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், பொருளாதாரத்தின் வெற்றி மட்டும் அல்ல.

இது, ஜனநாயகம் பற்றிய அரசியல் அமைப்பு முறையின் வெற்றியுமாகும் என்று ஆய்வாளர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author