சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, ஜனவரி முதல் மே திங்கள் வரை, சீனாவின் தொழிற்துறை நிறுவனங்களின் விற்பனை வருவாய் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 6.8விழுக்காடு அதிகரித்து ஒப்பீட்டளவில் விரைவான அதிகரிப்பை நனவாக்கியுள்ளது.
அவற்றில், உபகரணங்களின் தயாரிப்புத் தொழில் துறையின் விற்பனை வருவாய் 8விழுக்காடு அதிகரித்து தயாரிப்புத் தொழில் துறையில் 46.8விழுக்காட்டை வகித்துள்ளது. முதல் 5 திங்களில் ரோபோ, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய வாகன உபகரணங்களின் தயாரிப்புத் தொழில் துறையின் விற்பனை வருவாய் முறையே 27.7விழுக்காடு மற்றும் 46.3விழுக்காடு அதிகரித்துள்ளன. மேலும், இக்காலத்தில் நீராற்றல், சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், அணு ஆற்றல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பசுமை எரியாற்றல் தொழில் துறையின் விற்பனை வருவாய் 18.9விழுக்காடு அதிகரித்துள்ளது.
