சீன அரசவையின் செய்தி அலுவலகம் 17ஆம் நாள் முற்பகல், செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இவ்வாண்டின் முதல் 2 திங்கள்காலத்தில், சீனத் தேசிய பொருளாதார இயக்க நிலைமை குறித்து சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் ஃபு லின் குய் இதில் அறிமுகப்படுத்தினார்.
புள்ளிவிபரங்களின்படி, ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு விகிதம் 5.9 விழுக்காடாகும். கடந்த ஆண்டை விட 0.1 விழுக்காடு புள்ளிகள் உயர்ந்துள்ளது.
சீனத் தேசிய சேவைத் துறையின் உற்பத்தி மதிப்பு குறியீட்டு எண், கடந்த ஆண்டை விட 5.6 விழுக்காடு அதிகரித்து, கடந்த ஆண்டை விட 0.4 விழுக்காடு புள்ளிகள் உயர்ந்துள்ளது.
இவ்வாண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி திங்கள்களில், பல்வேறு ஒட்டுமொத்த கொள்கைகள் தொடர்ந்து செயல்படுத்துவதுடன் பயன் தந்துள்ளது. சீனத் தேசிய பொருளாதாரம் சீராக வளர்ந்து, இதன் வளர்ச்சித் தரமும் நிலைப்புத் தன்மையும் உயர்ந்து வருகிறது.