மத்திய கிழக்கு நிலைமை குறித்து ஷி ச்சின்பிங்கின் கருத்து

17ஆம் நாள், அஸ்தானாவில் நடைபெற்ற 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டின் போது சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உஸ்பேகிஸ்தான் அரசுத் தலைவர் மில்ஜியுயேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய கிழக்கு நிலைமை குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ஷி ச்சின்பிங் கூறுகையில்,

ஈரானின் மீதான ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் மேற்கொண்டது. இதனால், மத்திய கிழக்கு பகுதியின் பதற்ற நிலைமை உடனடியாக தீவிரமாகியுள்ளது. இது குறித்து சீன கவலைப்படுகின்றது.

இதர நாடுகளின் இறையாண்மையையும் உரிமை பிரதேச ஒருமைபாட்டையும் மீறிய அனைத்து நடவடிக்கைகளையும் சீனா எதிர்க்கின்றது. பல்வேறு தரப்புகள் இந்நிலைமையைத் தணிவுப்படுத்த வேண்டும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, மத்திய கிழக்கு பகுதியின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கு பாடுபட சீனா விரும்புகின்றது என்றார்.

You May Also Like

More From Author