17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கோ ச்சியாகுங் கூறுகையில்,
வெளிநாடுகளிலுள்ள சீன பொது மக்களின் பாதுகாப்பில் சீன அரசு உயர்வாக கவனம் செலுத்தி வருகின்றது. ஈரான்-இஸ்ரேல் மோதல் நிகழ்ந்த பிறகு, சீன வெளியுறவு அமைச்சகமும், இந்த இரு நாடுகளிலுள்ள சீன தூதரகங்களும் தூதரக பாதுகாப்பு அவசர அமைப்பு முறையை தொடங்கியுள்ளன.
ஈரான் மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்கள், இரு நாடுகளிலுள்ள சீன மக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்தது. இப்போது சில சீனர்கள், இந்த இரு நாடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். சீன வெளியுறவு அமைச்சகமும் தூதரகங்களும் தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து, இந்த இரு நாடுகளிலுள்ள சீனர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்து, அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பணியை செயல்படுத்தி வருகின்றன என்றார்.