சீனாவின் பெரிய சந்தை, குறிப்பாக நுகர்வுச் சந்தையில் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. 2024ஆம் ஆண்டு சீனாவின் காபி தொழிற்துறையின் மதிப்பு 31330 கோடி யுவானை எட்டியது. ஷாங்காயில் நடைபெறுகின்ற சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் இதனை நேரில் கண்டு உணரலாம்.
இக்கண்காட்சியில் காபி கொட்டைகள் வர்த்தகம் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. தென்கிழக்காசியாவிலுள்ள இந்தோனேசியா, மலேசியா, ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பியா ருவாண்டா, தென்அமெரிக்கத்திலுள்ள பிரேசில், கொலம்பியா, மத்திய அமெரிக்காவில் பனாமா, கரீபியன் பிராந்தியத்திலுள்ள ஜமைக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து பல்வகை காபி கொட்டைகளை வாங்கலாம். இந்த கண்காட்சியில் கொள்முதலாளர்களுக்கு பரந்த தேர்வுகள் கிடைக்கின்றன.
சி.ஐ.ஐ.இ கண்காட்சியின் அதிகாரப்பூர்வ இணைதளத்தில், விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் கண்காட்சிப் பகுதியில் “காபி” என்ற சொற்கள் மூலம் தேடினால், 111 தேடல் முடிவுகளும் காபி கொட்டை என்ற சொற்கள் மூலம் தேடினால் 34 தேடல் முடிவுகளும் கிடைக்கின்றன.
சீன சுங்கத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 2020 முதல் 2024 ஆண்டு வரை, சீனாவில் காபி கொட்டைகளின் நிகர இறக்குமதி 6.53 மடங்கு அதிகரித்துள்ளது. அது ஆண்டுக்கு சராசரியாக 65.7 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 2024ஆம் ஆண்டு சர்வதேச காபி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், எதிர்காலத்தில் சீனா உலகின் மிகப்பெரிய காபி சந்தைகளில் ஒன்றாக மாறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
