சீன நவீனமயமாக்கம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்துத் தொகுப்பு”என்னும் புத்தகம் அண்மையில் ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டது.
இப்புத்தகம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கட்சி வரலாறு மற்றும் ஆவண ஆய்வகத்தால் தொகுக்கப்பட்டது. சீன நவீனமயமாக்கம் பற்றி ஷி ச்சின்பிங் தெரிவித்த முக்கிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதுவரை ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியா, அரபு, ஜப்பான் ஆகிய மொழிப் படைப்புகள் வெளியிடப்பட்டன.
சீன நவீனமயமாக்கத்தின் தத்துவ அமைப்புமுறை மற்றும் நடைமுறை கொள்கையை வெளிநாட்டவர்கள் அறிந்து கொள்வது, நவீனமயமாக்கப் பாதையில் சர்வதேச சமூகம் கூட்டாக முன்னேறுவதை விரைவுபடுத்துவது, அமைதியான வளர்ச்சி மற்றும் பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பு கொண்ட உலக நவீனமயமாக்கத்துக்கான பொது கருத்தை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது.
