சீன-ஐரோப்பிய சரக்கு ரயில் சேவை குறித்த கருத்து கணிப்பு

Estimated read time 1 min read

இவ்வாண்டின் முதல் 2 திங்களில் மட்டும் சீனாவில் இருந்து 3501 ரயில்களின் மூலம் 3.52 இலட்சம் கொள்கலன்கள் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 32 விழுக்காடு மற்றும் 25 விழுக்காடு அதிகம். இந்த ரயில் சேவை குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், உலக இணையப் பயன்பாட்டாளர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.

அதன் முடிவின்படி, சீன-ஐரோப்பிய சரக்கு ரயில் சேவை, உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணி மற்றும் திறப்புடன் உலகப் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் சீனாவின் மனவுறுதியை வெளிக்காட்டுகிறது என்று 88.8 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். இந்த ரயில் சேவை, சர்வதேசச் சரக்குப் போக்குவரத்தின் செயல்திறனை உயர்த்தி, சர்வதேச வர்த்தகச் செலவைக் குறைத்துள்ளது என்று 91.2 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மேலும், சீன-ஐரோப்பிய சரக்கு ரயில் சேவை, உலகப் பொருளாதார மீட்சிக்கு நிலையான உந்து சக்தியைத் தொடர்ந்து ஊட்டி வருகிறது என்று 82.7 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author