4ஆவது சீனச் சர்வதேச விநியோக சங்கிலிப் பொருட்காட்சி ஜூன் 22முதல் 26ஆம் நாள் வரை நடைபெற்றது. எண்ணியல் மற்றும் நுண்ணறிவு தொழில்நுட்பம் முழு தொழில் சங்கிலிக்கும் பங்காற்றியுள்ளது. நாடு கடந்த புத்தாக்க சாதனங்களின் பயன்பாடு சீன விநியோகச் சங்கிலியின் வலுவான ஆதாரத்தை விட்டு விலகி இருக்க முடியாது என்பது நடப்புப் பொருட்காட்சி மூலம் மக்களுக்கு அறியப்பட்டுள்ளது.
அளவுக்கு மீறிய சந்தையின் சாதகம், முழுமை மற்றும் நெகிழ்வுடன் கூடிய தொழில் அமைப்பு முறை, தொடரவல்ல புத்தாக்க ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட சீன விநியோகச் சங்கிலி தொடர்ந்து மேலதிக உயிராற்றலை வெளிக்கொணர்ந்து உலகத்துக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. அவற்றில் சீன விநியோகச் சங்கிலியின் புத்தாக்க ஆற்றல் பெரும் கவனம் செலுத்தப்பட்டது.
உலக வளர்ச்சியைப் பொறுத்தவரை, பாதுகாப்புவாதம் அதிகரித்து புவிசார் அரசியல் மோதல் தீவிரமாகி வரும் பின்னணியில், சீன விநியோகச் சங்கிலி உலக விநியோக சங்கிலியின் நிலைப்புத் தன்மையைப் பேணிக்காப்பதற்கு மதிப்பு மிக்க உறுதித் தன்மையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
