சனாதனத்தை அழிப்பேன் என்றவர்களுக்குப் பாடம் புகட்டப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன்

Estimated read time 0 min read

கொசுவைப் போலச் சனாதனத்தை அழிப்பேன் எனக் கூறியவர்களுக்கு முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

இந்துக்களைப் பிரித்துப் பார்க்க முடியாது எனும் சூழல் உருவாகியுள்ளது என்றும் தமிழும், ஆன்மிகமும் ஒன்றோடொன்று இணைந்தது என தமிழிசை குறிப்பிட்டார்.

சனாதனத்தை அழிப்பேன் என்றவர்களுக்குப் பாடம் புகட்டப்பட்டுள்ளது என்றும் கந்த சஷ்டி கவசம் இந்துக்களுக்குக் கவசமாக விளங்குகிறது என்றும் முருக பக்தர்கள் மாநாட்டால் அரசியல் மாற்றம் ஏற்படும் என தமிழிசை சௌந்தரராஜன் உறுதிபட தெரிவித்தார்.

You May Also Like

More From Author