தங்கம் விலை சற்று குறைந்தது..!

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரசரவென ஏறியது.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமையில் இந்திய பங்கு சந்தைகள் செயல்படாது. அதனால் அன்றைய தினம் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்காது. ஆனால் தற்போது ஈரான் மீதான தாக்குதல், முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அதிக லாபம் தரும் பங்குச்சந்தையிலிருந்து பாதுகாப்பான முதலீட்டுக்கு பலர் திரும்புவதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமையான (மார்.1) தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருந்தது.

(மார்.1) நிலவரப்படி, கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 775-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660-க்கு விற்பனையானது.

சென்னையில் இன்று (மார்ச் 03) தங்கம் விலை குறைந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650க்கும், ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,25,200க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.315க்கும், ஒரு கிலோ ரூ.3,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author