ஐ.நா. பாதுகாப்பவை நடத்திய அவசரக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூச்சுங் 22ஆம் நாள் உரை நிகழ்த்துகையில் ஈரானின் மீது அமெரிக்கா தொடுத்த தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இச்செயல் ஐ.நா சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாட்டையும் சர்வதேசச் சட்டத்தையும் கடுமையாக மீறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கு பிரதேசம் கட்டுப்பாடற்ற நிலைமைக்குள் சிக்கிக் கொள்வதற்குச் சீனா ஆழ்ந்த கவலைப்படுவதாகத் தெரிவித்த அவர், இஸ்ரேல் உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகள் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
ராணுவம் மூலம் அமைதியைப் பெற முடியாது. பேச்சுவார்த்தை தான் ஒரேயொரு தீர்வுமுறையாகும். மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிதானத்தை மீட்டெடுப்பதற்கு சீனா சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து அயரா முயற்சி மேற்கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்தார்.