காமாக்யா கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

Estimated read time 0 min read

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயில் நடை திறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயிலில் 4 நாட்கள் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளில் முக்கியமான அம்புபாச்சி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த நான்கு நாட்களில் கோயிலின் பிரதான தெய்வமான, தேவி காமாக்யா தனது வருடாந்திர மாதவிடாய் சுழற்சியைக் கடந்து செல்வதாக நம்பப்படுகிறது.

இதனால் கோயிலின் நடை அடைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் 4 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி கோயிலின் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காமாக்யா தேவியை வழிபட்டனர்.

You May Also Like

More From Author