அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787-8 விபத்துக்குள்ளானதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு, பல போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் கோளாறுகளை கண்டறிந்து தினசரி சோதனைகளுக்கு உத்தரவிட்டது இங்கிலாந்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA).
மே 15 அன்று, 787 ட்ரீம்லைனர் உட்பட ஐந்து போயிங் மாடல்களின் இயக்குபவர்களுக்கு, ஒரு தயாரிப்பில் உள்ள பாதுகாப்பற்ற நிலைமைகளை சரிசெய்யுமாறு UK விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஒரு பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டது.
“B737, B757, B767, B777, B787 ஆகிய போயிங் விமானங்களில் நிறுவப்பட்ட எரிபொருள் நிறுத்து வால்வுகளைப் பாதிக்கும் ஒரு பாதுகாப்பற்ற நிலையை நிவர்த்தி செய்வதற்காக FAA ஒரு விமானத் தகுதி உத்தரவை (AD) வெளியிட்டுள்ளது” என்று CAA அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை முன்னரே கண்டறிந்ததா இங்கிலாந்து ஒழுங்குமுறை நிறுவனம்?
