சார்க்குக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தான், சீனா திட்டம்  

Estimated read time 0 min read

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பதட்டங்கள் காரணமாக 2016 முதல் செயலற்ற நிலையில் இருக்கும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பான சார்க் அமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய பிராந்திய குழுவை உருவாக்கும் திட்டங்களை பாகிஸ்தானும் சீனாவும் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தைகள் முன்னேறிய நிலையில் உள்ளன.
கடந்த ஜூன் 19 அன்று சீனாவின் குன்மிங்கில் நடந்த இதுதொடர்பான சமீபத்திய கூட்டத்தில் பங்களாதேஷும் கலந்து கொண்டது.
இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளை முன்மொழியப்பட்ட புதிய கூட்டமைப்பில் சேர்ப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

You May Also Like

More From Author