அமெரிக்க பாஸ்போர்ட்டில் டிரம்ப் படம்! 250-வது சுதந்திர தினத்திற்காக அதிரடி மாற்றம்  

Estimated read time 1 min read

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்புப் பதிப்பு (Limited-edition) பாஸ்போர்ட்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்திய இந்த நடவடிக்கை, நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது.
வரும் ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ள அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்தின் 250-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாஸ்போர்ட்டின் வடிவமைப்பில் சுதந்திரப் பிரகடனத்தின் மேல் அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வப் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும்.
அதிபரின் கையெழுத்து பிரத்யேகமாகத் தங்க நிறத்தில் இடம்பெறும்.
அமெரிக்காவை உருவாக்கிய முன்னோடிகளின் (Founding Fathers) ஓவியமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author