ஈரான் மீதான போர் தீவிரம்: எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டம்?  

Estimated read time 1 min read

மேற்கு ஆசியாவில் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வாய்ப்புள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
‘பைனான்சியல் டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில், ஈரானின் கச்சா எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதே தனது முதன்மையான விருப்பம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
“ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவை கைப்பற்றுவது எங்களுக்கு மிகவும் எளிதான காரியம். அங்கு அவர்களுக்கு பலமான பாதுகாப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களிடம் பல ராணுவத் திட்டங்கள் உள்ளன,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author