சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு!

சிலி நாட்டில் இன்று 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில், இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சாண்டியாகோவில் இன்று காலை 7.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

சாண்டியாகோவில் இருந்து வடக்கே 524 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், சிலியின் சில பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

You May Also Like

More From Author