புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் புல்வாமா மாவட் டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சிஆர்பிஎஃப்) வாகனங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.
இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீர மரணமடைந்தனர். இதற்கு பதிலடியாக விமானப் படையினர் 2019 பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தினர்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பாரத பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு புகழாரம் சூட்டினார்.
இதுகுறித்து பாரத பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
I pay homage to the brave heroes who were martyred in Pulwama. Their service and sacrifice for our nation will always be remembered.
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
” புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது தேசத்துக்காக அவர்கள் ஆற்றிய சேவையும் தியாகமும் என்றும் நினைவுகூரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.