தேவக்கோட்டை கண்டதேவி பெரியநாயகி அம்பாள் சமேத சொர்ணமூர்த்திஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம் நீதி மன்ற உத்தரவை பின்பற்றி விமரிசையாக நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிறகிலிநாத சுவாமி என்று அழைகப்படும் பெரிய நாயகி அம்பாள் சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று நடைபெறும் தேரோட்ட திருவிழாவில் நான்கு தலைகட்டு கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள்.
இதனிடையே இரு தரப்பினரிடையே தேர் வடம் பிடிப்பதில் எழுந்த பிரச்சனை ,குடமுழுக்கு, தேர்பழுது உள்ளிட்ட காரணங்களால் 10 ஆண்டுகளுக்கு மேலாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் புதியதேர் செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு வெள்ளோட்டத்திற்கு பின் தேரோட்டம் நீதி மன்ற கண்காணிப்பில் நடைபெற்றது.
தொடர்ந்து இந்த ஆண்டு தேரோட்டம் அறிவிப்பு வெளியான நிலையில் தேரோட்டத்தின் போது யாருக்கும் முதல் மரியாதை தரப்படக் கூடாது என்று உயர் நீதிமன்றம் மனுவின் அடிப்படையில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக நான்கு தலை கட்டு கிராமங்களை உள்ளடக்கிய கிராமங்களை சேர்ந்த தேர் இழுக்கும் பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நான்கு வீதிகளை வலம் வரும் திருத்தேரில் பிரியாவிடையுடன் சொர்ணமூர்த்தீஸ்வரரும் சிறிய தேரில் பெரிய நாயகி அம்பாளும் வலம் வந்தனர். பக்தர்கள் தடுப்பு கட்டைகளுக்கு பின்பு இருந்தே வழி நெடுகிலும் தேரோட்ட விழாவை தரிசித்து வருகின்றனர். பொதுமக்களும் பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.