இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜனவரி 17) மேற்கு வங்கத்தின் மால்டா நகரத்தில் தொடங்கி வைத்தார்.
இதுவரை பகல்நேரப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில்கள், இனி நீண்ட தூர இரவு நேரப் பயணங்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
