சீனாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், ரஷியா மீதான 18ஆவது சுற்று தடை நடவடிக்கைப் பட்டியலில் சீனாவின் சில தொழில்நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்ததுடன் ஆதாரமற்ற காரணங்களால் 2 சீன நிதி நிறுவனங்கள் மீது தடை நடவடிக்கை மேற்கொண்டது.
இது குறித்து சீனா கடும் மனநிறைவின்மை மற்றும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகச் சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 21ஆம் நாள் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சர்வதேச சட்ட ஆதாரம் மற்றும் ஐ.நா பாதுகாப்பவை அதிகாரம் இல்லாமல் தனிச்சை தடை நடவடிக்கை மேற்கொள்வதைச் சீனா எப்போதும் எதிர்க்கிறது. ஐரோப்பாவின் இச்செயல் சீன-ஐரோப்பிய தலைவர்களின் ஒத்த கருத்துக்களை மீறியுள்ளது. இரு தரப்பின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுக்கும் நிதி ஒத்துழைப்புக்கும் இது தீங்கு விளைவிக்கும் என்றார்.