இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கம் மற்றும் வெள்ளியைப் பிணையாக வைத்து, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் வழங்குவதற்கான புதிய தரப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம், கடன் பெறுபவர்களின் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் கடன் வழங்குபவர்களின் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதே ஆர்பிஐயின் முக்கிய நோக்கம் ஆகும்.
புதிய விதிகளின்படி, குறுகிய காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நகை அல்லது நாணயம் வடிவில் உள்ள தங்கம் மட்டுமன்றி வெள்ளியையும் பிணையாக வைத்து இனி கடன் பெற முடியும்.
இனி வெள்ளியையும் கடனாக பெறலாம்; ஆர்பிஐயின் புதிய விதிகள்
