கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.
அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார்.
இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.
இப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. தலைவர் 171 படத்தில் அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் லோகேஷ் ஈடுபட்டு வருகிறார். மே மாதத்தில், இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டிலும் பின் சென்னையில் உள்ள சில பகுதிகளிலும் நடக்கப்போவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ரஜினி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
தற்போது தலைவர் 171 குறித்து ஒரு செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் வில்லன் பவானி கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் முதலில் நடிக்க வைக்க அணுகி உள்ளார். ஆனால், அவருடைய கால்ஷிட் கிடைக்காத காரணத்தால் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதியை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால், கண்டிப்பாக தலைவர் 161 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ரஜினிகாந்தை தன்னுடைய குருவாக பார்க்கும் நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ் அதனால், இப்படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடிப்பாரா என்ற சந்தேகமும் எழுந்த நிலையில், தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல நடிகர் ராகவ லாரன்ஸ் நடிக்கபோவதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளது.
முன்னதாக சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் நெகட்டிவான விமர்சனங்களை பெற்றது. அது மட்டும் இல்லாமல் ராகவா லாரன்ஸ் கங்னா ஆகியோரின் நடிப்பும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தலைவர் 171 யில் ராகவா லாரன்ஸை வில்லனாக நடிக்க வைத்தால் காமெடி படமாக இருக்கும் என நெட்டிசன்கள் இப்போதே ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர்.