பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று முதல் முக்கிய விவாதம் தொடங்குகிறது.
எனினும், இது குறித்து வெளிநாடுகளுக்கு பயணித்த நாடாளுமன்ற சிறப்பு MP-க்கள் குழுவின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி யுமான சசி தரூருக்கு இதில் பேச அனுமதி கிடைக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி வட்டாரங்களின் தகவலின்படி, “சசி தரூர் இந்த விவாதத்தில் பேசுவதற்கான வாய்ப்பு இல்லை. பேச விரும்பும் எம்.பிக்கள் சிபிபி (Congress Parliamentary Party) அலுவலகத்துக்கே விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் தரூர் இதுவரை அந்தக் கோரிக்கையை விடுத்திருக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதம் இன்று தொடக்கம்
