திருவண்ணாமலை : அய்யனாரப்பன் கோயில் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Estimated read time 0 min read

செங்கம் அருகே அய்யனாரப்பன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செ.அகரம் பகுதியில் அய்யனாரப்பன் காட்டுக் கோயில் உள்ளது. இங்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் செ.அகரம், பண்டிதப்பட்டு, சின்னகோலாபாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்தும் ஆடு, கோழி, பன்றிகளைப் பலியிட்டும் வழிபாடு நடத்தினர்.

You May Also Like

More From Author