வாஷிங்டனுடன் தனி வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளாத நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை முழுமையான வரி விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
“உலகத்தைப் பொறுத்தவரை, இது 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இருக்கும் என்று நான் கூறுவேன்,” என்று டிரம்ப் கூறினார்.
ஸ்காட்லாந்தின் டர்ன்பெரியில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் நடந்த சந்திப்பின் போது அவர் இதனைத்தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த 10 சதவீத அடிப்படை வரியிலிருந்து இது கூடுதல் அதிகரிப்பைக் குறிக்கும்.
வரி விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என்று நம்பிய சிறிய நாடுகளுக்கு இது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யாத நாடுகளுக்கு 15-20% வரிகள்: டிரம்ப் எச்சரிக்கை
