தக்லமக்கான் பாலைவனத்தில் அமைந்துள்ள சீனாவின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயலான ஃபூமென் எனும் வயலில் நாளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அளவு 10ஆயிரம் டன்னைத் தாண்டியுள்ளது.
இவ்வாண்டு இவ்வயலில் 30 மிக ஆழமான எண்ணெய் கிணறுகள் துளைக்கப்பட்டன. அவற்றில் மிக ஆழமானது 9000 மீட்டரைத் தாண்டியது.
மேலும், கடந்த 2ஆண்டுகளில், இங்கு மேற்கிலிருந்து கிழக்காக 200 கிலோமீட்டர் நிலப்பரப்பில் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு செயலாக்க உபகரணங்கள் புதிதாக நிறுவப்பட்டன. ஆண்டுக்கு 50லட்சம் டன் எடையுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு பதனீட்டு திறன் கொண்டுள்ளது. நாளுக்கு 10ஆயிரம் டன் கச்சா எண்ணெய் அகழ்வு செய்ய முடியும். அதோடு, 50லட்சம் கன மீட்டர் இயற்கை எரிவாயு எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.