இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு 20லட்சம் கோடி யுவானை எட்டி வரலாறு காணாத அளவில் புதிய பதிவை எட்டியது. அவற்றில் யாங்சி ஆற்று டெல்டா மற்றும் குவாங்டாங்-ஹாங்காங்-மகாவ் பெரிய வளைகுடா பகுதியிலுள்ள வெளிநாட்டு வர்த்தக அளவு நிலைப்புடன் சீராக வளர்ந்துள்ளது.
ஷேன்சென் நகரிலுள்ள யென்டியன் எனும் துறைமுகம் உலகின் மிகப் பெரிய தனிக் கொள்கலன் கப்பல் துறைகளில் ஒன்றாகும். தினசரி 40ஆயிரத்துக்கும் அதிகமான கொள்கலன்கள் இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், இவ்வாண்டின் முற்பாதியில், ஷேன்சென் நகரின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை 2லட்சத்து 17ஆயிரம் கோடி யுவான் எட்டியுள்ளது. அவற்றில் ஏற்றுமதித் தொகை 1லட்சத்து 32ஆயிரம் கோடி யுவானாகும். இறக்குமதித் தொகை 85886கோடி யுவானாகும். சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள நகரங்களில் ஷேன்செனின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.