லன்சாங்-மேகுங் பொது எதிர்கால சமூக கட்டுமானம்

லன்சாங்-மேகுங் ஒத்துழைப்புக்கான 10வது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தலைமை தாங்கவுள்ளார். அது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் 13ம் நாள் கூறுகையில்,

லன்சாங்-மேகுங் ஒத்துழைப்பு, சீனா, கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகியவை கூட்டாக கலந்தாராய்ந்து, கட்டியமைத்து மற்றும் அனுபவிக்கும் புதிய ரக பிராந்திய ஒத்துழைப்பு முறைமையாகும். லன்சாங்-மேகுங் ஒத்துழைப்புக்கான 10வது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மூலம், மேகுங் ஆறு நெடுகிலுள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பு சாதனைகளையும் வெற்றி அனுபவங்களையும் தொகுத்து, எதிர்கால வளர்ச்சிக்குத் திட்டமிட சீனா விரும்புகிறது.

மேலும் வலிமையான லன்சாங்-மேகுங் பொருளாதார வளர்ச்சி மண்டலம், மேலும் நெருங்கிய லன்சாங்-மேகுங் பொது எதிர்கால சமூகம், இப்பிராந்திய மக்களுக்கு நலனுக்கும், தொடர வல்ல வளர்ச்சிக்கான புதிய உந்து சக்திக்கும் சீனா பாடுபட விரும்புகிறது என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author