ஜூன் 20ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2024ஆம் ஆண்டு உலக நுண்ணறிவு தொழிற்துறை பொருட்காட்சிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு தொழிற்துறை, புதிய சுற்று அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புரட்சி மற்றும் தொழிற்துறை மாற்றத்தின் முக்கிய உந்து சக்தியாகும்.
உலகப் பொருளாதாரச் சமுக வளர்ச்சிக்கும் மனித நாகரிக முன்னேற்றங்களுக்கும் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தும். செயற்கை நுண்ணறிவு தொழிற்துறையின் வளர்ச்சிக்குச் சீனா முக்கியத்துவம் அளிக்கின்றது.
பல்வேறு நாடுகளுடன் இணைந்து, எண்ணியல்மயமாக்கம், இணையத்தளமயமாக்கம் மற்றும் நுண்ணறிவுமயமாக்க வளர்ச்சி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் ஆரோக்கியமான வளர்ச்சியை முன்னேற்றவும், உலக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், அனைத்து நாடுகளைச் சேர்ந்த மக்களின் நலன்களை அதிகரிக்கவும் பாடுபடும் என்றார்.