வாஷங்டன் டி சி, உலகில் மிக ஆபத்தான நகரமாகும். இந்நகரம் அவசர நிலைமையில் நுழைந்தது. அதோடு, வீடுவாசலின்றி வாழ்கின்ற மக்களை இந்நகரிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டிராம்ப் அறிவித்தார்.
சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பின் படி, இந்நடவடிக்கை சமூக பாதுகாப்பு பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க முடியாது என்று 78.7 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் சமூக பாதுகாப்பு நிலைமை குறித்து இக்கருத்து கணிப்பில் கலந்துகொண்ட 92 விழுக்காட்டினர்கள் கவலை தெரிவித்தனர். வன்முறை குற்றம் மற்றும் தெருவோர் மக்கள் பிரச்சினைகள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பொதுவாக நிலவுகின்றன என்று 81.7 விழுக்காட்டினர்கள் தெரிவித்தனர்.