கிராமப்புறத்தின் பன்முக மறுமலர்ச்சியைப் பயனுள்ளதாக முன்னேற்றுவது 2025ஆம் ஆண்டு சீன அரசு வெளியிட்ட 1ஆவது இலக்க ஆவணத்திலுள்ள மைய அம்சமாகும்.
வேளாண்மையில் பெரிய நாடான சீனா உலகின் 10விழுக்காட்டு விளை நிலத்தைக் கொண்டுள்ளதோடு, உலகின் 20விழுக்காட்டு மக்களுக்கு உணவளிக்க தேவை. அறிவியல் தொழில்நுட்பம், விளைநிலம் மற்றும் உயிரின சூழல் பாதுகாப்பைப் பயன்படுத்தி நாட்டின் தானிய களஞ்சியத்தின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவது, சீன ஆளும் கட்சியின் முதன்மை கடமையாகும். 2024ஆம் ஆண்டு வரை, சீனாவின் தானிய உற்பத்தி கடந்த 21ஆண்டுகளில் தொடர்ச்சியாக பெரும் விளைச்சலை நனவாக்கியுள்ளது.
இதற்குப் பின்பு, கிராம மறுமலர்ச்சி எப்படி நனவாக்கப்படலாம்? மேலை நாட்டிலிருந்து வேறுபட்ட சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண்மை நவீனமயமாக்க பாதையில் சீனா காலடியெடுத்து வைத்துள்ளது. முதலாவது, கிராமத் தொழில்களை வளர்க்க வேண்டும். வேளாண்மை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைவது மூலம் வேளாண்மை மேலும் உயர் செயல்திறனாக மாறியுள்ளது. மேலும், கிராம சுற்றுலா, உயிரின வேளாண்மை, பொருள் சாரா மரபு செல்வப் பொருட்களின் ஆலை முதலியவற்றைச் சிறப்புத் தொழிலாக்கி உள்ளூர் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். இரண்டாவது, கிராமப்புற கட்டுமானத்தை முன்னேற்ற வேண்டும். சாலை, நீர்வளம், மீன்சாரம் மற்றும் இணைய வசதியை நன்கு கட்டியமைப்பதோடு, தெளிவான நீர் மற்றும் பசுமையான மலையுடன் கூடிய அழகான கிராமங்களையும் உருவாக்க வேண்டும். மூன்றாவது, மனித முதன்மை என்பதை அடிப்படையாகக் கொண்டு, கிராமப்புற மேலாண்மையை முழுமைப்படுத்த வேண்டும்.
கிராமப்புற மறுமலர்ச்சி மூலம், சீனாவின் கிராமப்புறங்களில் வாய்ப்புகள் மற்றும் அருமையான வாழ்க்கை நிறைந்திருக்கும் நவீனமயமான வீடாக மாறியுள்ளன.