வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Estimated read time 1 min read

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், வரும் 19-ம் தேதி அதிகாலை தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author