பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வான்வெளியைப் பயன்படுத்துவதில் பரஸ்பரத் தடை அமலில் உள்ளது.
பாகிஸ்தானின் இந்தக் கட்டுப்பாடு காரணமாக, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா செல்லும் விமானங்களை வேறு வழிகளில் (Reroute) இயக்க வேண்டிய கட்டாயம் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு Rs.4,000 கோடி இழப்பு
