காமன்வெல்த் 2030 முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Estimated read time 0 min read

2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்தும் உரிமைக் கோரலுக்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 2030ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு உரிமைக் கோருவதற்கான முன்மொழிவை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் முன்மொழிந்தது.

இந்நிலையில் இதற்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்க, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

அனுமதி கிடைக்கும் பட்சத்தில் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

You May Also Like

More From Author