சீன ஊடகக் குழுமம் நடத்திய அமைதியின் எதிரொலி என்ற பண்பாட்டு பரிமாற்ற நடவடிக்கை பிரிட்டனின் லிவர்பூரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹெய்சியுங் காணொளி வழியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
வரலாற்றின் நினைவு மற்றும் உண்மை, காலத்தால் மங்கிவிடாது. வரலாறு ஏற்படுத்திய ஞானம், எதிர்காலத்தை வெளிப்படுத்தும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தெரிவித்தார். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். வரலாற்றைச் சரியாக பதிவு செய்தால், நியாயத்தைப் பேணிக்காக்க முடியும். நாங்கள் வரலாற்றைப் பின்பற்றி எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்றார்.