ஹங்கேரி-சீன இருமொழிப் பள்ளி, மத்திய கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரே ஒரு இருமொழி முழுநேர அரசுப் பள்ளியாகும். 2009ஆம் ஆண்டின் அக்டோபரில், அப்போதைய சீன துணை அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஷிச்சின்பிங் இப்பள்ளியில் பயணம் மேற்கொண்டார்.
இரு நாடுகளின் மக்கள் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதன் மூலம் ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வை அதிகரிக்க வேண்டும். இரு நாடுகளின் எதிர்கால நட்பார்ந்த ஒத்துழைப்புக்கு நம்பிக்கையாக மாணவர்கள் விளங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் வசந்த காலத்திற்கு முன்பே, இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பங் லீயுவன் அம்மையாருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் அவர்களுக்கு பதில் கடிதம் அனுப்பினார். முயல் ஆண்டின் வசந்த விழாவின் போது, இப்பள்ளி மாணவர்களின் கடிதம் பெறுவது மிகவும் மகிழச்சி. சீன மொழியில் மாணவர்கள் நீண்டகாலமாக கற்றுகொண்டு வருகின்றனர்.
இரு நாடுகளின் நட்புறவுக்கு பங்காற்றி வருவதற்கு பாராட்டுகள் என்று ஷிச்சின்பிங் இக்கடிதத்தில் தெரிவித்தார்.